Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு குறைஞ்சு உடல் எடை வேகமா குறையும்...
Poondu Vendhaya Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? இப்படி டயட்டில் இருக்கும் போது உங்களின் காலை உணவு பெரும்பாலும் ருசி இல்லாத உணவாகத் தான் இருக்குமா? அப்படியானால் உங்களின் டயட்டில் கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுவும் பூண்டு வெந்தய கஞ்சியை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் வேகமாக கரைந்து, உடல் எடையைக் குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் கோடைக்காலத்தில் இந்த கஞ்சியை செய்து குடித்து வந்தால், இந்த கஞ்சியில் வெந்தயம் சேர்க்கப்பட்டிருப்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு வெந்தய கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு வெந்தய கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி - 150 கிராம்
* பூண்டு - 100 கிராம்
* வெந்தயம் - 3 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
துவையலுக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* புதினா - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 துண்டு
* தேங்காய் - 2 சில்லு
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் அரிசியை ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து இறக்கி, ஒரு
கிண்ணத்தில் எடுத்து நீரை ஊற்றி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* அதே சமயம் வெந்தயத்தை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் குக்கரில் ஊற வைத்த அரிசியை கழுவி சேர்க்க வேண்டும்.
* பின் அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து, அதன் பின் ஊற வைத்துள்ள
வெந்தய விதைகளை சேர்த்து, பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி,
தேங்காய், புளி துண்டு, வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்து, கிண்ணத்தில் எடுத்துக்
கொண்டால், புதினா துவையல் தயார்.
* அடுத்து குக்கரைத் திறந்து, கரண்டியால் கஞ்சியை கிளறி விட்டு
மசித்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, அத்துடன் தேவையான
அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி விட்டு இறக்கினால்,
சுவையான பூண்டு வெந்தய கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications