Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...!
Poondu Milagu Sadam Recipe in Tamil: பெரும்பாலான அம்மாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தங்கள் குழந்தைகளுக்கு லன்ச்-க்கு என்ன செய்து கொடுப்பது என்பதுதான். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பது தயிர் சாதம், லெமன் சாதம் அல்லது தக்காளி சாதம் போன்ற கலவை சாதத்தைதான். இதற்கு காரணம் அவற்றின் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே மாதிரியான சாதத்தை எத்தனை நாட்கள்தான் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு கலவை சாதத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் இந்த பூண்டு மிளகு சாதத்தை ஒருமுறை செய்து கொடுங்கள். இந்த மசாலா பூண்டு சாதம் ஆரோக்கியமானது மட்டுமல்ல இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்படி அருமையாக இருக்கும். மதிய உணவை டக்கென செய்து முடிக்க விரும்புபவர்கள் இந்த மசாலா பூண்டு சாதத்தை தாராளமாக முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஆரோக்கியமான பூண்டு மிளகு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகு சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சமைத்த சாதம்
- 3 ஸ்பூன் சமையல் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சோம்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் முந்திரிப் பருப்பு
- 5 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் மிளகுத் தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு கப் பாஸ்மதி அரிசியை வேக வைத்து தயார் செய்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியாக இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும். சாதத்தை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- முதலில் ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் 3 ஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், 1 ஸ்பூன் கடுகு சேர்த்து, அவை வெடிக்கத் தொடங்கும் வரை பொரிய விடவும்.
- கடுகு பொரிந்தவுடன் சோம்பைச் சேர்க்கவும். அதன்பின், 2 வர மிளகாயை உடைத்து சேர்த்து, நன்கு கிளறவும்.
- பின்னர் 1 கொத்து கறிவேப்பிலையைச் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- பின் 2 ஸ்பூன் உடைத்த முந்திரிப்பருப்பைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் 15 பூண்டுப் பற்களைச் சேர்த்து, அவற்றை நன்றாக கிளறவும். பூண்டிலிருந்து நறுமணம் வெளிப்பட்டு, அது லேசாகப் பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.
- பின்னர் நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடிப் பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறவும்.
- பின் நறுக்கிய 1 தக்காளியை வெங்காயக் கலவையுடன் சேர்த்து, அவை நன்கு கலக்கும்படி கிளறவும், தக்காளிகள் மென்மையாகி வெங்காயத்துடன் முழுமையாக ஒன்றிணையும் வரை ஒன்றாக வேகவிடவும்.
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ½ ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயக் கலவையுடன் நன்கு கிளறவும்.
- கடாயில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, மசாலா முழுமையாக வேகும் வரை காத்திருக்கவும்.
- கலவை முழுமையாக வெந்த பிறகு, அதனுடன் சமைத்த சாதத்தைச் சேர்க்கவும். சாதத்தின் மேல் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் 1 ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றைத் தூவி நன்றாக கிளறவும்.
- சாதம் உடையாமல், கலவையுடன் முழுமையாக ஒன்றிணையும் வகையில் மெதுவாகக் கிளறி விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான பூண்டு மிளகு சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications