Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
தித்திக்கும்... கரும்புச்சாறு பொங்கல்
இந்த பொங்கலில் வித்தியாசமான பொங்கல் செய்ய விரும்பினால், கரும்புச்சாறு பொங்கலை செய்யலாம். இதை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்யக்கூடியது.
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கலும், கரும்பும் தான். பாரம்பரிய முறைப்படி பொங்கல் செய்ய பலரும் விரும்புவதுண்டு. ஆனால் அந்த பாக்கியம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஏனெனில் விறகு அடுப்பு வைத்து பொங்கல் வைக்க போதுமான இடம் இல்லை. எனவே பலரும் வீட்டில் ஸ்டவ்வில் தான் பொங்கல் வைக்க வேண்டியுள்ளது. அதிலும் நிறைய பேர் குக்கரில் பொங்கல் வைக்கிறார்கள். ஏனெனில் குக்கரில் பொங்கல் வைத்தால், சீக்கிரம் ரெடியாகிவிடும். மேலும் பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கரும்புச்சாறு பொங்கல்.

இந்த பொங்கலில் வித்தியாசமான பொங்கல் செய்ய விரும்பினால், கரும்புச்சாறு பொங்கலை செய்யலாம். இதை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்யக்கூடியது. உங்களுக்கு கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரும்புச்சாறு பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/8 கப்
* கரும்புச்சாறு - 1 1/2 கப்
* கற்கண்டு - 1/8 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கரும்பை எடுத்து, அதன் வெளித்தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரிசியை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்
* பின் அதில் அரிசியைப் போட்டு, கரும்பு சாற்றினை ஊற்றி கலந்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கற்கண்டை சேர்த்து நன்கு, கற்கண்டை கரைய விட வேண்டும். கற்கண்டுகள் நன்கு கரைந்ததும், கரண்டியால் நன்கு பொங்கலை மசித்து விட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடியைத் தூவி கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் கிளறினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications