Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மணமணக்கும்.. பொள்ளாச்சி ஸ்பெஷல் கோழி குழம்பு.. எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Pollachi Special Kozhi Kuzhambu Recipe In Tamil: விடுமுறை நாட்களில் தான் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்கப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு சுவையான சமையலை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் பொள்ளாச்சி ஸ்பெஷல் கோழி குழம்பை செய்யுங்கள். இந்த கோழி குழம்பு இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு பொள்ளாச்சி ஸ்பெஷல் கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி ஸ்பெஷல் கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 1/4 கிலோ
மசாலாவிற்கு...
* மல்லி - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-7
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 2 இதழ்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கசகசா - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
குழம்பிற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கல்உப்பு - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2
* சுடுதண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்க கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு,
சீரகம், மிளகு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கறிவேப்பிலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் கசகசாவை சேர்த்து லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், பிரியாணி இலை மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அத்துடன் கல் உப்பு
சேர்த்து சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, பின் குழம்பிற்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி
வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை 1
டீஸ்பூன் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்துக்
கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பொள்ளாச்சி ஸ்பெஷல் கோழி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











