Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
மக்கானா கிரேவி
மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சாப்பாத்தி அல்லது புல்கா செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மக்கானா கிரேவி செய்யுங்கள்.

உங்களுக்கு மக்கானா கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மக்கானா கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மக்கானா/தாமரை விதைகள் - 2 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 5
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 /4 டீஸ்பூன்
* சோம்பு - 1 /2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப் போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்புசேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 3/4 கப் நீரை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 7-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











