Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
வேர்க்கடலை சட்னி செய்யும் போது இந்த 1 பொருளை சேத்துக்கோங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்...
Peanut Coriander Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளைகளில் பெரும்பாலும் இட்லி, தோசை, உப்புமா தான் காலை டிபனாக இருக்குமா? ஒவ்வொரு நாளும் இந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பது சிரமமாக இருக்குமா? அப்படியானால் ஒருமுறை வேர்க்கடலை சட்னியை இந்த ஸ்டைலில் செய்யுங்கள்.
இந்த வேர்க்கடலை சட்னியின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது தான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லியை சேர்த்து வேர்க்கடலை சட்னி செய்யும் போது, அதன் சுவை அல்டிமேட்டாக இருக்கும். அதுவும் இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, உப்புமா, வெண் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்களும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். வேலைக்கு செல்பவர்கள் இந்த சட்னியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வேர்க்கடலை கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* புளி - சிறிய துண்டு
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* துருவிய தேங்கய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கையளவு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் சிறிய துண்டு புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து வேர்க்கடலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கையளவு கொத்தமல்லியை சேர்த்து சில நொடிகள் வதக்கி, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான வேர்க்கடலை கொத்தமல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











