Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Peanut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி பிடிக்குமா? அப்படியானால் அந்த சட்னியை செய்யுங்கள். வேர்க்கடலை சட்னியை பல விதங்களில் செய்வார்கள். நீங்கள் வித்தியாசமான சுவையில் வேர்க்கடலை சட்னியை செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் சட்னியை அரையுங்கள். இப்படி சட்னி அரைக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1/2 கப்
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - 2 சில்லு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து நன்கு
வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு தட்டில் எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் பூண்டு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு, கறிவேப்பிலை
சேர்த்து, அத்துடன் 2 சில்லு பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிய துண்டு புளி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, ஜாரில் சிறிது
நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும். உங்களுக்கு சட்னி எந்த
பதத்தில் வேண்டுமோ அதற்கேற்ப நீரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு
3 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள்: 110-125 kcal (வேர்க்கடலை மற்றும்
தேங்காய் இருப்பதால் நல்ல ஆற்றல் தரும்)
* புரதச்சத்து: 4-5 கிராம்
* கார்போஹைட்ரேட் : 4-5 கிராம்
* நார்ச்சத்து: 1.5-2 கிராம்
* கொழுப்பு: 9-10 கிராம் (உடலுக்கு நன்மை செய்யும்
நல்ல கொழுப்பு)
ஆரோக்கிய குறிப்பு:
வேர்க்கடலையை வறுத்த பிறகு அதன் தோலை முழுமையாக நீக்காமல், பாதி தோலோடு சேர்த்து அரைத்தால் சட்னியின் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இன்னும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications