Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
பாகற்காயை இந்த பக்குவத்தில் தொக்கு செஞ்சு பாருங்க... பாகற்காய் பிடிக்காதவங்க கூட அள்ளி சாப்பிடுவாங்க...!
Pavakkai Thokku Recipe in Tamil: பாகற்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இது வயதானவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு பொருள். இது குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத ஒன்று.
காரணம் அதன் கசப்பு சுவை தான். அந்த கசப்பு சுவை அதிகம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிட வைக்க இந்த மாதிரி தொக்கு செய்து பாருங்க. எப்படி பாகற்காய் தொக்கு செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பாகற்காய் - ½ கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- புளி - பெரிய எலுமிச்சை அளவு
- வெல்லம் - 50 கிராம்
- அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - ½ டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - ½ டேபிள் ஸ்பூன்
- கசகசா - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ½ சிட்டிகை
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி மற்றும் கசகசா சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- பின் பாகற்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பின் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து அதன் மேற்பரப்பில் இருக்கும் கரும்பூஞ்சையை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- புளியின் மேற்பகுதியை தண்ணீரில் கழுவி விட்டு சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
- பின் புளியை கரைத்து ஓடு அல்லது குப்பை இல்லாதபடி எடுத்து
கொள்ளவும்.
குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் சீரகம், மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின் அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் படி வறுத்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி, மற்றும் பாகற்காய் நன்றாக வெந்து குழைந்து வந்ததும் புளி கரைசலை சேர்க்கவும்.
- காய் நன்றாக வெந்ததும், வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.
- குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, அரைத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் 3 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்துவிடவும்.
- நன்கு திரண்டு தொக்கு பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைத்து இறக்கினால் பாகற்காய் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications











