Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Pattinapakkam Beach Style Eral Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இறால் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் இறால் வாங்கி சமைப்பீர்களா? பொதுவாக இறாலை வறுவல், 65, மசாலா, கிரேவி என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இறால் வாங்கினால், அதைக் கொண்டு பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு ரெசிபியை செய்யுங்கள்.

இந்த இறால் தொக்கு நன்கு காரசாரமாகவும், ருசியாகவும் இருக்கும். பட்டினப்பாக்கம் பீச் பக்கம் போனால், இந்த இறால் தொக்கு மிகவும் ஃபேமஸ். உங்களுக்கு பட்டினப்பாக்கம் பீச் சென்று இந்த தொக்கை ருசிக்க முடியாவிட்டால், கவலைப்படாமல் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த தொக்கு சாதம், தோசை, சப்பாத்தி என எல்லாத்துக்குமே சூப்பரா செட் ஆகும்.
இந்த பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு ரெசிபி குறித்து செஃப் வாணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* இறால் - 1/2 கிலோ
வறுத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான கிண்ணத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள்
தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் கழுவி
வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் மிளகு
மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு வறுத்து, இடி உரலில்
போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் 2
டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை
சேர்த்து பொரிய விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து பரப்பி விட்டு, 2
நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் இறாலை கிளறி விட்டு, 10 நிமிடம்
நன்கு இறாலை வேக வைக்க வேண்டும்.
* இறால் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியை
சேர்த்து நன்கு கிளறி, மொறுமொறுவென்று வரும் வரை ப்ரை செய்து
இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல்
இறால் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
