Latest Updates
-
5 தக்காளி இருந்தா இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும் -
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க -
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..! -
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! -
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும்
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Parotta Kadai Salna Recipe In Tamil: நம் அனைவருக்குமே பரோட்டா கடை சால்னா ரொம்ப பிடிக்கும். சொல்லப்போனால் பல வீடுகளில் இந்த சால்னாவின் ருசிக்காகவே பரோட்டாவை வாங்கி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் இந்த சால்னாவிற்காக பரோட்டாவை வாங்கி சாப்பிடாமல், வீட்டிலேயே அந்த சால்னாவை செய்து சாப்பிடுங்கள். இந்த பரோட்டா கடை சால்னா செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு இந்த பரோட்டா கடை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா கடை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 பெரிய துண்டு
* பிரியாணி இலை - 2
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1/2
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கறி மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய மூடி தேங்காய் - 1 (துருவியது)
சால்னா தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 1/2 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (நறுக்கியது)
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை,
அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பாதி வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கறி மசாலா
தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எணணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கல்பாசி, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் புதினா மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி
விட வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி
வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு ஹோட்டல் சால்னா போன்ற நிறத்தை பெற, ஒரு வாணலியில் 2 ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து கிளறி, கொதித்துக் கொண்டிருக்கும் சால்னாவுடன்
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக சால்னாவில் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பரோட்டா கடை சால்னா
தயார்.



Click it and Unblock the Notifications
