Latest Updates
-
பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்? | Vivo T4 Lite 5G 15 Percent Discount -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
புது ATM ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்.. 3 முக்கிய மாற்றங்கள்! | New ATM Transactions Rules From April 1 -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
Surprise Plunge in Gold & Silver Prices amid Iran War Tensions: Chennai Rates Drop further -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது..
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...!
Parangikai Payasam Recipe in Tamil: செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். எந்த ஒரு விஷேச வீட்டிலும் உணவிற்கு பின் வழங்கப்படும் ஒரு இனிப்பு வகை பாயாசம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலும் பல வகை உண்டு. அந்த வரிசையில் நாம் இங்கு செட்டிநாட்டு பரங்கிக்காய் பாயாசம்.
பரங்கிக்காயை பொதுவாக நாம் பொரியல் அல்லது குழம்பு வைத்துதான் சாப்பிட்டிருப்போம், ஆனால் பரங்கிக்காயை வைத்து அற்புதமான பாயாசத்தையும் நாம் செய்யலாம். இந்த பாயாசம் வழக்கமான பாயாசத்தைப் போல அல்லாமல் தனித்துவமான சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த பாயாசத்தை செய்து விட்டால் அதற்குப்பிறகு உங்களுக்கு பாயாசம் என்றாலே இதன் நினைவுதான் வரும்.

உங்களுக்கு சூப்பரான செட்டிநாட்டு பரங்கிக்காய் பாயசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரங்கிக்காய் பாயச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் தோல் சீவி துருவிய பரங்கிக்காய்
- 2 1/2 கப் பால், முழு கிரீம் பால்
- 10 முழு பாதாம்
- 10 முந்திரி பருப்பு
- 3 ஏலக்காய்
- 10 திராட்சை
- 5 ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை
- 1 டீஸ்பூன் நெய்
- 2 டீஸ்பூன் பால் பவுடர்
செய்முறை:
- செட்டிநாடு பரங்கிக்காய் பாயசத்தை செய்வதற்கு முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் பாலை சூடாக்கி, அதில் துருவிய பரங்கிக்காயைச் சேர்த்து, பரங்கிக்காயை பாலில் 2-3 நிமிடங்கள் வேக விடவும்.
- பின்னர் பாதாம், ஏலக்காய், 6 முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து, பரங்கிக்காயுடன் சேர்த்து வேக விடவும்.
- பரங்கிக்காய் மற்றும் பால் கலவையை மேலும் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடையிடையே தொடர்ந்து கிளறவும்.
- பரங்கிக்காய் நன்கு வெந்து மென்மையாகி கூழ் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- இந்த கலவை ஆறிய பிறகு, அதை மிக்ஸி ஜாடிக்கு மாற்றி நன்றாக விழுதாக அரைக்கவும்.
- ஒரு கப் பாலை அதே பாத்திரத்தில் மிதமான தீயில் சூடாக்கி, அதில் அரைத்த பூசணிக்காய் விழுதைச் சேர்க்கவும். நன்கு கலந்து 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும், இடையிடையே கிளறி விடவும்.
- அதே நேரத்தில் ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் மீதமுள்ள முந்திரி மற்றும் திராட்சையை வறுக்கவும்.
- பால் மற்றும் பரங்கிக்காய் கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அடுப்பை அணைத்து வெல்லம் நன்கு கரையும் வரை கிளறவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் பாயாசம் தயார்!



Click it and Unblock the Notifications











