பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க..

Posted By:

Paneer Yakni Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்வீர்களா? முக்கியமாக வெங்காயம், தக்காளி இல்லாமல் இதுவரை பன்னீரை செய்ததில்லையா? அப்படியானால் அடுத்தமுறை வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யக்கூடிய பன்னீர் யாக்னியை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த பன்னீரை யாக்னியை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Paneer Recipes How To Make Paneer Yakni Recipe

உங்களுக்கு இந்த பன்னீர் யாக்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் யாக்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 400 கிராம்

அரைப்பதற்கு...

* முந்திரி - 25 கிராம்
* பாதாம் - 10
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 3 துண்டு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை குடைமிளகாய் - 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் குடைமிளகாய் - 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* சிவப்பு குடைமிளகாய் - 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* அரைத்த பேஸ்ட்
* வெதுவெதுப்பான நீர் - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பன்னீரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம் முந்திரி, பாதாமை சுடுநீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரி, பாதாம், பச்சை மிளகாய், உப்பு, தயிர் மற்றும் 3 துண்டுகள் பன்னீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு திரண்டு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, கட்டிகள் இல்லாதவாறு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, மூடி வைத்து 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து அதில் வறுத்த பன்னீரை சேர்த்து கிளறி 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பிரஷ் க்ரீம் மற்றும் கசூரி மெத்தியை சேர்த்து கிளறி 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வதக்கிய குடைமிளகாயை சேர்த்து கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் யாக்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 27, 2026, 23:28 [IST]
Desktop Bottom Promotion