Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
காரசாரமான... பன்னீர் பெப்பர் ப்ரை
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்து கொடுங்கள். இந்த பன்னீர் பெப்பர் ப்ரை ஒரு நல்ல ஸ்நாக்ஸாக இருப்பதோடு, பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியையும் தணிக்கும். மேலும் இந்த பன்னீர் பெப்பர் ப்ரையை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு பன்னீர் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 3/4 கப்
* சோள மாவு - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 3/4 கப் மைதா, 3/4 கப் சோள மாவு, 1/2 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்தற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் பன்னீர் துண்டுகளை எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் சீரகம், 1/2 சோம்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications










