Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்..
Paneer Masala For Chapati In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீரையும் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறான பன்னீர் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் மசாலா செய்யுங்கள்.

பன்னீர் மசாலாவை பலவாறு செய்யலாம். அதுவும் இந்த பக்குவத்தில் பன்னீர் மசாலாவை செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் பன்னீர் மசாலா பேச்சுலர்களுக்கு ஏற்றது என்றும் கூறலாம். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் மசாலா, மல்லித் தூள், காஷ்மீர் மிளகாய் தூள்,
கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில்
வைத்து, நன்கு மசாலாவை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, 3 நிமிடம்
மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ப்ரை செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு
கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
பன்னீர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
