Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
பன்னீர் மக்கானி
சப்பாத்திரிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படியானால் அதற்கு இன்று பன்னீர் மக்கானி செய்யுங்கள். இந்த பன்னீர் மக்கானி செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு,சுவையாகவும் இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும், சப்பாத்தி, புல்கா என்று செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்ளா? அப்படியானால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படியானால் அதற்கு இன்று பன்னீர் மக்கானி செய்யுங்கள். இந்த பன்னீர் மக்கானி செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, அனைத்து வயதினமும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

கீழே பன்னீர் மக்கானியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பணிர்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 1/2 கப்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1-2 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி/உலர்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (இறுதியில் சேர்க்க)
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* சிறிய காஷ்மீரி மிளகாய் - 2
* சிறிய பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 3 பல்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* பச்சை ஏலக்காய் - 2
* கருப்பு ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* முந்திரி - 10
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொருட்கள் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மூடி வைத்து, மிதமான தீயில் 7-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் உள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் அனைத்தையும் எடுத்துவிட்டு, வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மிளகாய் தூள் சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ளதை வடிகட்டியால் வடிகட்டி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பிரஷ் க்ரீம், கசூரி மெத்தி, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கிளறி இறக்கி மேலே சிறிது வெண்ணெயை வைத்தால், சுவையான பன்னீர் மக்கானி தயார்.
குறிப்பு:
* வெண்ணெயில் மிளகாய் தூள் சேர்த்ததும், உடனே அரைத்த விழுதை வடிகட்டி ஊற்ற வேண்டும். இல்லையெனில் கிரேவியின் நிறம் மாறிவிடும்.
* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீர மிளகாய் தூள் பயன்படுத்தினல் நிறம் இன்னும் அற்புதமாக இருக்கும்.
* மில்க் க்ரீமை அளவுக்கு அதிகமாக ச்ர்த்துவிட வேண்டாம்.
* கசூரி மெத்தியை தேயத்தோ, வறுத்தோ பயன்படுத்த வேண்டாம்.



Click it and Unblock the Notifications