Just In
- 27 min ago
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- 2 hrs ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
Don't Miss
- News
இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா.. புட்டுப் புட்டு வைத்த சாட்டிலைட்!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Finance
முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ருசியான... பால் பொங்கல்
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. இந்த பொங்கல் பண்டிகையன்று நீங்கள் வித்தியாசமான ஒரு பொங்கலை செய்ய நினைத்தால், இந்த வருடம் பால் பொங்கலை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த பால் பொங்கலை குக்கரிலேயே செய்யலாம். இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. அதேப் போல் இது அதிக நேரமும் எடுக்காது.
கீழே பால் பொங்கல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பிகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - ஒரு கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்
* பால் - 4 கப்
* முந்திரி - 20
* உலர் திராட்சை - 20
* ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
* நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி கிளறி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் உலர் திராட்சையைப் போட்டு, திராட்சை பலூன் போன்று வீங்கும் வரை வதக்கி இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்ற வேண்டும்.
* இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.
குறிப்பு:
* பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.
* பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
* பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.
Image Courtesy: aromatic-cooking