Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
வெங்காய வடை
மாலை வேளையில் மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? நீங்கள் வடை பிரியரா? அப்படியானால் வெங்காயத்தைக் கொண்டு வடை செய்து சாப்பிடுங்கள்.
மாலை வேளையில் மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? நீங்கள் வடை பிரியரா? அப்படியானால் வெங்காயத்தைக் கொண்டு வடை செய்து சாப்பிடுங்கள். இந்த வெங்காய வடை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை திடீரென்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போதும் செய்து கொடுக்கலாம். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1-2 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைய வேண்டும்.
* பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நீரைத் தவிர மைதா, அரிசி மாவு மற்றும் பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து சற்று கெட்டியான மாவாக பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, வடை போன்று தட்டி, நடுவே விரலால் துளையிட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான வெங்காய வடை தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications

