Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Oats Vegetable Omelette Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஓர் உணவுப் பொருள் தான் ஓட்ஸ். ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த ஓட்ஸை பலரும் கஞ்சியாக எடுப்பார்கள். ஆனால் ஓட்ஸைக் கொண்டு தோசை, இட்லி, உப்புமா என்று பல ரெசிபிக்களை தயாரிக்கலாம்.

முக்கியமாக காலையில் சட்டென்று ஒரு ஆரோக்கியமான காலை உணவை தயாரிக்க நினைத்தால் ஓட்ஸ் வெஜிடேபிள் ஆம்லெட்டை செய்து சாப்பிடலாம். இந்த ஆம்லெட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சரியாக சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இந்த ஓட்ஸ் ஆம்லெட்டை ஒன்று கொடுத்தால் போதும் வயிறு நிரம்பிவிடும்.
உங்களுக்கு இந்த ஓட்ஸ் வெஜிடேபிள் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் வெஜிடேபிள் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - சிறிது
* முட்டை - 2-3
* வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (துருவியது)
* குடைமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - பாதி (விதைகளை நீக்கி பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை எடுத்து நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன்
பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மற்றொரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த முட்டையுடன் ஊற வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்,
குடைமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், எண்ணெயை தடவி,
கலந்து வைத்துள்ள கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ஓட்ஸ் வெஜிடேபிள் ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications