Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வித்தியாசமான ஆம்லெட் ரெசிபிக்கள்!!!
காலை உணவு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒருவர் எந்த வேளையில் சாப்பிடாமல் இருந்தாலும், காலை வேளையில் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் காலை உணவு தான் ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தற்போது அனைவரும் வேலைக்கு செல்வதால், காலையில் என்ன உணவுகளை சமைப்பது என்ற குழப்பத்திலேயே காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் ஆற்றலை நிலைக்க செய்ய காலை உணவு முக்கியமானது.
எனவே காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பொதுவாக ஆம்லெட் என்றால், வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு அடித்து, ஆம்லெட்டுகளாக செய்வோம். ஆனால் ஆம்லெட்டுகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை காலையில் செய்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

காளான் ஆம்லெட்
காளான் ஆம்லெட் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் காளானானது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

பசலைக்கீரை ஆம்லெட்
கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இரத்த சோகை உள்ளவர்கள், பசலைக் கீரையைக் கொண்டு வித்தியாசமாக ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

வெஜிடேபிள் ஆம்லெட்
குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுத்தால், அந்த காய்கறிகளை ஆம்லெட் போன்று செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுக்கக்கூடியது.

ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
உருளைக்கிழங்கை பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக அதனை ஆம்லெட்டில் பயன்படுத்தியும் சாப்பிடலாம். இது மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.

ஈஸியான காளான் ஆம்லெட்
முன்பு பார்த்த காளான் ஆம்லெட் நீரிழிவு நோயாளிகளுக்கென்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆனால் இந்த காளான் ஆம்லெட் குழந்தைகளுக்கு ஏற்றது.



Click it and Unblock the Notifications
