For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான மீன் வடை

By Mayura Akilan
|

Fish Vadai
மீனை குழம்பு, வறுவல், ப்ரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள். அதேபோல் மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

வடை செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார். இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

English summary

Tasty Fish Vadai | சுவையான மீன் வடை

Fish Cutlets. Let see what you need for fish vadai.
Story first published: Thursday, June 21, 2012, 9:54 [IST]
Desktop Bottom Promotion