For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறால் ஃப்ரைடு ரைஸ்

By Maha
|

இறால் பிரியர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, எப்படி சிக்கனைக் கொண்டு ஃப்ரைடு ரைஸ் செய்கிறோமோ, அதேப் போன்று இறாலைக் கொண்டு இங்கு எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்வதென்று என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதை முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Shrimps Fried Rice Recipe

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
இறால் - 250 கிராம் (சிறியது)
கேரட் - 3-4 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 6-7 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - சிறிது

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின்பு சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!

English summary

Shrimps Fried Rice Recipe

As shrimps are loved and enjoyed with rice, here is an Indian style shrimp fried rice. It is a perfect recipe for seafood lovers who want to eat rice and shrimps in a new way.
Story first published: Saturday, January 11, 2014, 15:54 [IST]
Desktop Bottom Promotion