Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
ஜங்லி மட்டன் குழம்பு
ஜங்லி மட்டன் குழம்பு ஒரு ராஜஸ்தான் ரெசிபி. பொதுவாக ராஜஸ்தான் ரெசிபிக்கள் மிகவும் காரமாகவும், அதே சமயம் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் தரும். குறிப்பாக எளிதில் செய்யக்கூடியது.
பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 8
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்ழுன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 5
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி, மிளகு, கடுகு, கசகசா ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, மட்டனில் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்டி விட வேண்டும்.
பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் தொடர்ந்து பிரட்டி விடவும்.
கடைசியாக 3 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ஜங்லி மட்டன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
