Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சீரக சிக்கன் குழம்பு ரெசிபி
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பு செய்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சீரக சிக்கன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இதன் பெயர் சாதாரணமாக இருந்தாலும், இந்த ரெசிபியின் செய்முறை வித்தியாசமாகவும், அதே சமயம் ஈஸியாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த சீரக சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1 கப் (250 மி.லி)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெள்ளை வெங்காயம் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் சீரகப் பொடி, மிளகாய் தூள், வெங்காயத் தாள், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிக்கன் ஓரளவு வேகும் வரை கிளறி விட வேண்டும்.
பின் தக்காளியை சேர்த்து கிளறி, சிக்கன் ஸ்டாக் ஊற்றி பிரட்டி, சிக்கன் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, மிளகு தூள், கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா தூவி கிளறிவிட்டால், சுவையான சீரக சிக்கன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
