Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
பெப்பர் சில்லி சிக்கன்
சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும்.
மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 1
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கேசரி பவுடர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் முட்டை, கார்ன் ஃப்ளார், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி ஒரு முறை பிரட்டி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பெப்பர் சில்லி சிக்கன் ரெடி!!!



Click it and Unblock the Notifications
