For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சப்ளி கபாப்: ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

சப்ளி கபாப் ஒரு ஆப்கானிஸ்தான் ரெசிபியாகும். இந்த ரெசிபியை மட்டன், மாட்டிறைச்சி என்று எதைக் கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். இங்கு மட்டனைக் கொண்டு எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். மேலும் இந்த கபாப் ரெசிபியின் சுவையானது மிகவும் அருமையாக இருக்கும்.

இப்போது அந்த சப்ளி கபாப் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். ரம்ஜானுக்கு நோன்பு இருப்பவர்கள், நோன்பு முடியும் போது செய்து சாப்பிட ஏற்றவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சரி, அந்த கபாப் ரெசிபியைப் பார்ப்போமா....

Delicious Chapli Kebab: Ramzan Special Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 1/2 கிலோ
கோதுமை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மட்டன் கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கீமாவில் எண்ணெயை தவிர்த்து, அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதை தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சப்ளி கபாப் ரெடி!!!

English summary

Delicious Chapli Kebab: Ramzan Special Recipe

Learn to prepare Chapli kebabs at home by following the recipe given here. The Chapli kebab hails from the Afghanistan region and has travelled over time to Pakistan and India.
Story first published: Saturday, July 5, 2014, 14:07 [IST]
Desktop Bottom Promotion