Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சுவையான...வெண்ணெய் இறால்!!!

தேவையான பொருட்கள் :
இறால் - 10
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 3
பூண்டு - சிறிது
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலின் தலையை வெட்டி நீக்கிவிடவும். பின் அந்த இறாலை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அந்த எண்ணெயில் இறாலைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் கிராம்பை தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி, உருகியதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, கிராம்புப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அத்துடன் வறுத்த இறால், சர்க்கரை, சோயா சாஸ், சைனீஸ் வைன் மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு வதக்கி, அந்த சாறானது இறாலில் இறங்கும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கவும்.



Click it and Unblock the Notifications
