Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
மொறுமொறுப்பான... சிக்கன் லெக் ப்ரை
ரம்ஜான் அன்று நிறைய வேலைகள் இருக்கும். அப்போது பிரியாணி, குழம்பு என்று அனைத்தையும் செய்த பின்னர், சைடு டிஷ் செய்வதற்கு போதிய நேரம் இல்லாவிட்டால், அப்போது எளிமையான முறையில் ஒரு வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபியை செய்யலாம். அதிலும் இத்தனை நாட்கள் நோன்பு மேற்கொண்டிருந்ததால், ரம்ஜான் அன்று பல சுவையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுவோம்.
அந்த நேரத்தில் எளிமையாகவும், வித்தியாசமானதாகவும் சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், அதற்கு சிக்கன் லெக் ப்ரை சரியாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் லெக் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் - 8
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (அரைத்தது)
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 கப்
முட்டை வெள்ளைக்கரு - 2 (அடித்தது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் லெக் பீஸை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் கத்திக் கொண்டு சிக்கன் லெக் பீஸின் தசைப்பகுதியை ஆழமாக கீறி விட்டு, உப்பு கொண்டு சிக்கன் மீது தேய்த்து விட வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி மிளகாய் மற்றும் 1 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலந்து, அந்த கலவையை சிக்கன் மீது தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, முட்டையை ஊற்றி, சிறிது தண்ணீர், மீதுள்ள பச்சை மிளகாய் பேஸ்ட் மற்றும் மிளகு தூளை சேர்த்து சிறிது உப்பு போட்டு, நன்கு மென்மையாக சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
பின் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நினைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சிக்கன் லெக் ப்ரை ரெடி!!!



Click it and Unblock the Notifications
