Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
சில்லி சிக்கன் கிரேவி
உங்கள் வீட்டில் மதிய வேளையில் வெஜிடேபிள் பிரியாணி செய்து, அத்துடன் ஏதேனும் சிக்கன் கிரேவி செய்து சாப்பிட நினைத்தால், சில்லி சிக்கன் கிரேவி செய்து சுவையுங்கள். இது வித்தியாசமாக இருந்தாலும், அற்புதமான ருசியில் இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் ஈஸி.
இங்கு சில்லி சிக்கன் கிரேவியை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று கூறுங்கள். முக்கியமாக இந்த சில்லி சிக்கன் கிரேவி சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனுடன் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
எஞ்சிய எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் சிறிது நீரில் சோள மாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சில்லி சிக்கன் கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications
