For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி சிக்கன் கிரேவி

By Maha
|

வெங்காய விலை அதிகம் இருக்கும் காரணத்தினால், தற்போது பல உணவுகளில் வெங்காயத்தையே பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க சிக்கன் பிரியர்களே! உங்களுக்காக வெங்காயம் சேர்க்காமல், தக்காளியை அதிகம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான சிக்கன் கிரேவியை கொடுத்துள்ளோம். இந்த கிரேவியை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டது.

சரி, இப்போது அந்த வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் தக்காளி சிக்கன் கிரேவியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chicken In Tomato Gravy: A Recipe Without Onions

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
தயிர் - 1 கப்
தக்காளி - 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)

செய்முறை:

முதலில சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் கசகசா மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.

பின் சிக்கன் துண்டுகளைப் போட்டு, 6-7 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு சீரகப் பொடி, மல்லி தூள், மிளகு தூள், சர்க்கரை மற்றும் அரைத்து வைத்திருக்கும் கசகசா பேஸ்ட் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, தண்ணீரை ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு, இறக்கி கொத்தமல்லியை தூவினால், அருமையான சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

English summary

Chicken In Tomato Gravy: A Recipe Without Onions

Chicken lovers get ready to try out this finger-licking no-onion recipe of chicken in tomato gravy and enjoy it's divine taste.
Desktop Bottom Promotion