Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி
நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம்.
இப்போது நாம் அதில் செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவியை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அதன்படி சமைத்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 4
பச்சை மிளகாய் - 3-4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நண்டு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். (இப்படி செய்வதால் நண்டு வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டு மென்மையாக இருக்கும்.)
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதோடு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
பின் அதில் நண்டு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications
