Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
சீஸ் பிரெஞ்சு டோஸ்ட்
பெரும்பாலும் காலையில் வேலைக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, எப்போதும் நல்ல சுவையான காலை உணவை செய்ய முடியாது. அந்த நேரத்தில் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்து, அதனையே தான் காலையிலும் சாப்பிடுவோம். ஆனால் இப்போது சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாக வயிற்றை நிரப்பக் கூடியதாகவும் இருக்கும் ஒரு சூப்பர் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
அது வேறொன்றும் இல்லை, பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் ஒரு டோஸ்ட் செய்வது தான். இந்த டோஸ்ட்டில் முட்டைகளை சேர்த்து செய்வதால், நிச்சயம் இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு சிறந்த ரெசிபியாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 4
முட்டை - 2
சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும். (அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.) இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து தோசைக்கல்/பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பின்பு அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி!!!



Click it and Unblock the Notifications

