Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்

தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கீமாவை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 1 கப் தண்ணீரை சேர்த்து, குக்கரில் போட்டு 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மற்றொரு 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, வதக்க வேண்டும்.
பின்பு வேக வைத்து இறக்கி வைத்துள்ள கீமாவை நீரை வடித்துவிட்டு, இதோடு சேர்த்து கிளற வேண்டும்.
கீமாவை சேர்த்த பின்பு நன்கு கிளறி, 3-4 நிமிடம் அடுப்பில் வைத்து, பின் கரம் மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு ஒரு 5-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
