Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மழைக்காலத்தில் அவசியம் செய்ய வேண்டிய சுவையான நெல்லிக்காய் ரசம் ரெசிபி... எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கோங்க...
ரசம் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வித விதமாக ரசம் வைத்து உடலை வலுப்பெற செய்வதில் அம்மாக்களுக்கு நிகர் யாரும் இல்லை. தக்காளி ரசம், பருப்பு ரசம், புளி ரசம், செலவு ரசம், எலுமிச்சை ரசம், கொள்ளு ரசம் என சொல்லி கொண்டே போனாலும் ரசத்தின் வகைகள் ஒருபோதும் முடிவடையாது.
ஒவ்வொரு ரசத்திற்கும் ஒரு தனிப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கும். அந்த வரிசையில் இங்கு பார்க்க போவது நெல்லிக்காய் ரசம். நெல்லிக்காய் மழை நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து சளி காய்ச்சல் போன்றவற்றை நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது. இந்த ஆரோக்கியமான ரசத்தை எப்படி செய்வது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பெரிய நெல்லிக்காய் - 3
- சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்
- மிளகு - 1 ½ டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 5 பல்
- துவரம் பருப்பு - ¼ கப்
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பாத்திரத்தில் நன்றாக பழுத்த தக்காளி பழத்தை சேர்த்து மூழ்கும்
அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.
- கொத்தமல்லி விதையை ஒரு வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து
ஆறவிடவும்.
- துவரம் பருப்பை நன்றாக கழுவி ¼ கப் பருப்பிற்கு 1 கப் தண்ணீர் ஊற்றி
குக்கரில் சேர்க்கவும்.
- அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து 3 விசில்
விட்டு நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி வைத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் மிளகு, பச்சைமிளகாய், பூண்டு, கருவேப்பிலை, வறுத்து
வைத்த கொத்தமல்லி விதை மற்றும் - நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து
அரைத்து கொள்ளவும்.
- பின் அதனுடன் சீரகம் சேர்த்து மிக்ஸில் இரண்டு 2 பல்ஸ் விட்டு
எடுத்து கொள்ளவும்.
- வேக வைத்து ஆற வைத்த தக்காளியுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து
நன்றாக கரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்த தக்காளி கரைசல்
மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின் அதனுடன் மசித்து வைத்த பருப்பை சேர்க்கவும்.
- தாளிக்க பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து
காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை
சேர்க்கவும்.
- அதில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து ரசத்தில் சேர்த்து
கலக்கவும்.
- ரசம் நன்றாக நுரை கட்டியதும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால்
நெல்லிக்காய் ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications
