Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Erode Special Nallampatti Nattu Kozhi Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் நாட்டுக்கோழி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை செய்யுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த ரெசிபியை செய்யலாம்.

உங்களுக்கு ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
வறுவலுக்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுக்கோழி - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், மிளகு,
பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 1/2 லிட்டர் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 20-25 நிமிடம் நன்கு சிக்கனை வேக வைக்க
வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அவ்வப்போது கிளறி விட
வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 15 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சிக்கனில் உள்ள நீர் வற்றி
நன்கு சிக்கன் நன்கு வெந்திருக்கும். பின் அதை இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், 1 சிட்டிகை சீரகம்,
வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி தாளித்து,
சிக்கனுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி
நாட்டுக்கோழி வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications





