Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி செய்வது எப்படி?
நீங்கள் இட்லி பொடி பிரியராக இருந்தால், இந்த நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடியை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
இட்லி பொடி அனைவருக்குமே பிடிக்கும். இந்த இட்லி பொடியானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் காரணம். அந்த வகையில் நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இந்த இட்லி பொடியானது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் இட்லி பொடி பிரியராக இருந்தால், இந்த நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடியை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உங்களுக்கு நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை, தட்டில் உள்ள கடலைப்பருப்புடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் மல்லியை சேர்த்து அதை ஒரு 2 நிமிடம் வறுத்து, அதையும் கடலைப்பருப்புடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கட்டி பெருங்காயத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதைத் துண்டுகளாக்கி வாணலியில் போட்டு நசுக்கி விட்டு வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வரமிளகாயை சேர்த்து அதையும் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை சேர்த்து 1 நிமிடம் நசுக்கிவிட்டு வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக, ஈரமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications