சன்டே ஸ்பெஷல்: மைசூர் மட்டன் கிரேவி

இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ரெசிபியை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மைசூர் மட்டன் கிரேவி செய்யுங்கள்.

Posted By:

விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவருக்கும் முதலில் தோன்று இன்று என்ன சமையல் செய்து சாப்பிடலாம் என்பதாகவே இருக்கும். இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ரெசிபியை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மைசூர் மட்டன் கிரேவி செய்யுங்கள்.

இந்த மைசூர் மட்டன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். உங்களுக்கு மைசூர் மட்டன் கிரேவி எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா?

Mysore Mutton Gravy Recipe In Tamil

கீழே மைசூர் மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 500 கிராம்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4-5 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் - 500 மிலி

* சோம்பு - 1 டீஸ்பூன்

* தயிர் - 1/3 கப்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

கிரேவிக்கு...

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (அரைத்தது)

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* கடுகு - 1/4 டீஸ்பூன்

* பட்டை - 1 இன்ச்

* ஏலக்காய் - 4

* கிராம்பு - 4

* அன்னாசிப்பூ - 1

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* கறிவேப்பிலை - சிறிது

* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து 1-1 1/2 மணிநேரம் மட்டனை நன்கு வேக வைக்க வேண்டும்.

* மட்டன் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

* பின்பு வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கிரேவியை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மைசூர் மட்டன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, March 19, 2023, 11:00 [IST]
Desktop Bottom Promotion