Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Mysore Coconut Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கடலைப்பருப்பும், தேங்காயும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான மைசூர் ஸ்பெஷல் சட்னியை செய்து விடலாம்.
இதுவரை நீங்கள் வழக்கமான தேங்காய் சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த மைசூர் ஸ்டைல் தேங்காய் சட்னி வழக்கமான கார சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த கடலைப்பருப்பு தேங்காய் சட்னி மைசூரில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு சுவையான மைசூர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 5 காஷ்மீரி மிளகாய்கள்
- 1 ஸ்பூன் பொடித்த வெல்லம்
- 3 பூண்டு பல்
- 1/2 ஸ்பூன் புளிச்சாறு
- 4 மிளகு
- 3/4 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- மைசூர் சட்னி செய்வதற்கு, ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பைச் சேர்க்கவும்.
- பின்னர் பருப்பு பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் வர மிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின் வெல்லம், பூண்டு, புளிக்கரைசல் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, மிதமான தீயில் 1 நிமிடம் சமைக்கவும்.
- பின்னர் தேங்காய், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கலந்து, தொடர்ந்து கிளறியவாறே மிதமான தீயில் 2 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- இந்த கலவை நன்கு ஆறியதும், சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இந்த மைசூர் சட்னியை அப்படியே சாப்பிடலாம், நீங்கள் விருப்பப்பட்டால் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்தும் சாப்பிடலாம்.
- மைசூர் சட்னியை உடனடியாகப் பரிமாறவும் அல்லது காற்றுப் புகாத ஒரு டப்பாவில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 நாட்களுக்கு சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
