Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளி வெங்காயம் சேர்க்காம.. மணமணக்கும்.. மட்டல் வறுவலை செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Mutton Varuval Recipe In Tamil: நீங்கள் மட்டன் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் மட்டன் வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் மட்டனை சமைத்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் மட்டனை சமைக்கும் போது வெங்காயம், தக்காளி சேர்த்து தான் சமைத்திருப்பீர்கள்.
ஆனால் அடுத்த முறை வெங்காயம், தக்காளி சேர்க்காமல் மட்டன் வறுவலை செய்யுங்கள். இந்த மட்டன் வறுவல் பேச்சுலர்கள் மற்றும் முதன்முதலாக சமைக்க தொடங்கியிருப்பவர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காமல் மட்டன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காமல் செய்யக்கூடிய மட்டன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டனை வேக வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் -1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுவலுக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குககரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை சேர்த்து,
அத்துடன் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, இஞ்சி
பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு 2 நிமிடம்
வதக்கி விட வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள மட்டனை அப்படி நீருடன் சேர்த்து 5 நிமிடம்
நன்கு நீர் வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே
தூவினால், சுவையான மட்டன் வறுவல் தயார்.
Image Courtesy: Awesome Cuisine



Click it and Unblock the Notifications











