Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை!
சன்டே ஸ்பெஷல் - மட்டன் பாயா ரெசிபி
இந்த வார விடுமுறையில் ஒரு ஆரோக்கியமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ரெடியா? அது தான் மட்டன் பாயா. பாயா என்றால் ஆட்டுக்கால் என்று அர்த்தம். பெரும்பாலும் இதை இடியாப்பம், ஆப்பம், இட்லியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
இந்த வார விடுமுறையில் ஒரு ஆரோக்கியமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ரெடியா? அது தான் மட்டன் பாயா. பாயா என்றால் ஆட்டுக்கால் என்று அர்த்தம். பெரும்பாலும் இதை இடியாப்பம், ஆப்பம், இட்லியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த மட்டன் பாயாவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதை பெரும்பாலும் உடல்நலம் சரியில்லாத போது, உடலுக்கு தெம்பு கிடைக்க அதிகம் குடிக்க சொல்வார்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான மட்டன் பாயா செய்யத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால் - 1 (1/2 கிலோ)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - ஒரு கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலில் உள்ள கருகிய மேல் தோலை மட்டும் நீக்கிவிட வேண்டுடும். அப்படி நீக்கும் போது சதைப் பகுதியை நீக்கிவிடாதீர்கள்.
* பின் ஆட்டுக்காலை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதைக் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த ஆட்டுக்காலை குக்கரில் போட வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பாதி தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் குக்கரை மூடி 10-15 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும். குக்கரில் உள்ள எலும்புகளானது நன்க உடைந்திருக்க வேண்டும். அப்படியென்றால் தான் குழம்பு நல்ல சுவையுடன் இருக்கும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மீதமுள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து வதக்கிய பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் ஆட்டுக்காலை நீருடன் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வேண்டுமானால் தேவையான அளவு நீரை ஊற்றி ஒரு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், ஆட்டுக்கால் பாயா தயார்!
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications












