Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
வீடே மணக்கும் ஆட்டுக்கால் பாயா.. இந்த சண்டே ட்ரை பண்ணுங்கள்..!
ஆட்டுக்கால் பாயா தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகையாகும், இது தென்னிந்தியாவில் உள்ள கிராமங்களில் அதிகமாக விரும்பி சமைக்கப்படுகிறது..
இது பெரும்பாலும் காலை உணவாக பரோட்டா, ஆப்பம், இடியாப்பம், உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி எளிமையாக குக்கரில் வைத்து சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையானப் பொருட்கள்
ஆட்டுக்கால் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளக்காய் - நான்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 மேசைகரண்டி
உப்பு - தே. அளவு
தேங்காய் - அரை மூடி
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, ஏலகாய், கிராம்பு - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - சிறிதளவு
செய்முறை:
முதலில் சுட்ட ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு மற்றும் முடி ஆகியவற்றை அகற்றி சுத்தமாகக் அலசி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஆட்டுக்கால், நறுக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி அதிக தீயில் 6 - 7 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து மேலும் சில நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்கவிடவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் போட்டு கொதிக்கவிடவும்.
அதன் பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி..
இந்த ஆட்டுக்கால் பாயாவை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும். இதனை இந்த சண்டெ உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்..



Click it and Unblock the Notifications