Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா?
திருமணம் என்பது இந்தியாவில் மேற்கத்திய நாடுகளைப் போல அல்லாமல் மிகவும் புனிதமான உறவாகக் கருதப்படுகிறது. இது இரண்டு தனி நபர்களை மட்டுமின்றி இரண்டு குடும்பங்களை இணைக்கும் புனிதமான அமைப்பாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஆனால் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தாலும், தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் இந்தியாவில் திருமணம் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

திருமணம் அதன் முக்கியத்துவத்தை இழக்கும் போது சமூகத்தில் திருமணம் மீறிய உறவுகள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு, இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகரித்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த சம்பவங்கள் டெல்லி, நொய்டா, சென்னை, கொல்கத்தா, பாட்னா, லக்னோ, பெங்களூரு அல்லது மும்பை போன்ற பெரிய பெருநகரங்களில் அல்லாமல், தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
கோயில்கள் மற்றும் பட்டுப் புடவைகளுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டு நகரமான காஞ்சிபுரம், திருமணம் மற்றும் ஒருதார மணம் குறித்த இந்தியாவின் மாறிவரும் நம்பிக்கைக்கு முக்கிய சான்றாகத் திகழ்கிறது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் ரகசிய உறவுகளை நாடுபவர்களுக்கான 'ஆஷ்லே மேடிசன்' (Ashley Madison) எனும் டேட்டிங் தளத்தில் பதிவு செய்வதில், இந்தியாவின் முன்னணி நகரமாக இந்த வருடமும் காஞ்சிபுரம் மீண்டும் மாறியுள்ளது.
ஆஷ்லே மேடிசனின் சமீபத்திய தரவுகளின்படி, அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் காஞ்சிபுரத்திலிருந்தே பதிவாகியுள்ளன. இந்தப் பட்டியலில் இந்நகரம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடமும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஆர்வம் காட்டும் நகரங்களில் இதுவே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ச்சியளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து மேலும் சில தமிழ்நாட்டு நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் கள்ள உறவு அதிகமுள்ள டாப் 10 நகரங்கள்
1. காஞ்சிபுரம்
2. கோயம்புத்தூர்
3. திருவள்ளூர்
4. சென்னை
5. குருகிராம்
6. நொய்டா
7. பெங்களூர்
8. டேராடூன்
9. புனே
10. டெல்லி
இந்தியா பற்றிய அதிர்ச்சியளிக்கும் முடிவு
மற்றொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, இந்தச் செயலியின் உறுப்பினர் பதிவுகளில் இந்தியா இப்போது 20 நாடுகளுக்குள் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த இடம் எட்டாவதாக இருந்தது. ரகசிய டேட்டிங் மீதான இந்தியாவின் ஆர்வம் அதிகரித்து வருவதற்கான ஒரே சான்று இதுவல்ல. முன்னதாக இந்த ஆண்டில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளைத் தேடுபவர்களுக்கான டேட்டிங் தளமான 'க்ளீடன்' , இந்தியாவில் தனது பயனர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளதாக அறிவித்தது. இந்த எண்கள் உணர்த்தும் செய்தி என்னவெனில், இந்தியாவில் திருமணம் மற்றும் உறவுகள் குறித்த கண்ணோட்டம் மாறிவருகிறது, மேலும் இது பெருநகரங்களில் மட்டும் நடப்பதில்லை.
க்ளீடன் நிறுவனத்தின் ஆய்வு
2024-ல், க்ளீடன் நிறுவனம், முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் வசிக்கும் 25 முதல் 50 வயதுக்குட்பட்ட, திருமணமான 1,503 இந்தியர்களிடம், திருமணம் மற்றும் கள்ள உறவு குறித்த மாறிவரும் மனப்பான்மைகளை ஆராய்வதற்காக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த ஆய்வில், பங்கேற்றவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஸ்விங்கிங் உட்பட பாரம்பரியமற்ற உறவு முறைகளுக்குத் திறந்த மனதுடன் இருப்பது கண்டறியப்பட்டது. ஸ்விங்கிங் என்பது, திருமணமாகாதவர்கள் மற்றும் உறுதியான உறவுகளில் இருப்பவர்கள் பொழுதுபோக்கிற்காக மற்றவர்களுடன் பாலியல் அனுபவங்களில் ஈடுபடும் ஒரு பரஸ்பர சம்மதத்துடன் கூடிய செயலாகும். முக்கிய பெருநகரங்களில் இதுபோன்ற தளங்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் காஞ்சிபுரத்தில் இதன் வளர்ச்சி மிகவும் ஆச்சரியமளிக்கிறது.



Click it and Unblock the Notifications

