Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
காரசாரமான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெசிபி... வாரம் ஒரு தடவை இப்படி வைச்சு குடிங்க... உடம்புக்கு ஒன்னும் வராது.
Mutton Nenju Elumbu Soup Recipe in Tamil: இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் நிலவுகிறது. இப்படியான சூழ்நிலையில் நிறைய பேர் அடிக்கடி சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனையால் அவதிப்படுவார்கள், குறிப்பாக இந்த நிலையில் இந்நிலையில் இப்பிரச்சனைகளுக்கு உடனே மருந்து, மாத்திரைகளைப் போடாமல், நம் முன்னோர்கள் கூறுவது போன்று நல்ல காரசாரமான சூப் குடித்தால், தொண்டைக்கு இதமாக இருப்பதோடு, நல்ல நிவாரணமும் கிடைக்கும்.
அதுவும் இப்படி சளி பிடித்திருக்கும் வேளையில் மட்டன் நெஞ்செலும்பு சூப் குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். மட்டன் நெஞ்செலும்பு சூப் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியது. சொல்லப்போனால் குளிர்காலத்தில் வாரம் 1 முறை நெஞ்செலும்பு சூப் குடிப்பது பல ஆரோக்கியப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

உங்களுக்கு காரசாரமான மட்டன் நெஞ்செலும்பு சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் நெஞ்செலும்பு சூப்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ மட்டன் நெஞ்செலும்பு கறி
- 15 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 5 பல் பூண்டு
- 4 கிராம்பு
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 1 டேபிள் ஸ்பூன் தனியா
- 1 துண்டு பட்டை
- 1 பிரியாணி இலை
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் தக்காளி, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும், வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைத்துகே கொள்ளவும், மட்டன் நெஞ்செலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மிளகு, தனியா, மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடான பின் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் அதில் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டன் நெஞ்செலும்பு கறியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மிளகு மசாலாவிலிருந்து ஒரு ஸ்பூன், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 10 விசில் வரும் வரை வேக விடவும்.
- 10 விசில் வந்ததும் குக்கரின் மூடியை திறந்து மட்டன்நெஞ்செலும்பு சூப்பை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியைத் தூவி அதை எடுத்து ஒரு கின்னத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.



Click it and Unblock the Notifications