Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: மட்டன் கொத்துக்கறி ரெசிபி
மழை பெய்துள்ளதால் பலருக்கும் சளி பிடித்திருக்கும். இன்று வார விடுமுறையில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் மட்டனைக் கொண்டு நல்ல காரசாரமான ஒரு ரெசிபி செய்யுங்கள்.
மழை பெய்துள்ளதால் பலருக்கும் சளி பிடித்திருக்கும். இன்று வார விடுமுறையில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் மட்டனைக் கொண்டு நல்ல காரசாரமான ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் மிளகுத் தூள் நிறைய சேர்த்து மட்டன் கொத்துக்கறி செய்தால், சளி அனைத்தும் முறிந்துவிடும். இந்த மட்டன் கொத்துக்கறி ரசம் சாதம், சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் கொத்துக்கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் கொத்துக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
மசாலாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் மட்டனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 12-15 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் முற்றிலும் வற்றியதும், மேலே மிளகுத் தூளை தூவி கிளறி, அதன் பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மட்டன் கொத்துக்கறி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

