Latest Updates
-
பாத்ரூம்மில் இந்த 5 பொருட்களை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க.. -
Skin Care: வயதான அறிகுறியை சிறப்பாக குறைக்கும் சிறந்த உணவுகள் - அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
தீபாவளிக்கு 1/4 கிலோ கடலை மாவு இருந்தா போதும்.. 2 கிலோ மைசூர் பாக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
November 2026 Horoscope: நவம்பர் மாதத்தில் நஷ்டங்களை சந்திக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
நரைமுடியை மறைக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஹேர் டைகளை ட்ரை பண்ணுங்க.. -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க - இல்லனா மிஷின் வீணாகிரும் -
குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்!
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி கதம்ப பொரியல் செய்யுங்க - டாப்பா இருக்கும்
Muttaikose Kadhamba Poriyal Recipe in Tamil: நம் வீடுகளில் சாம்பார், ரசம் போன்றவை வைக்கும் போது அதற்கு பொரியல் செய்வது என்பது மிகவும் அவசியமானதாகிறது. அனைத்து வீடுகளிலும் பொரியல் என்றாலே அதில் முட்டைக்கோஸ் பொரியல்தான் முதலிடத்தில் இருக்கும். வீடுகளில் மட்டுமல்ல கல்யாண வீடுகளில் கூட பொரியல் என்றால் முதலில் செய்யப்படுவது முட்டைக்கோஸ் பொரியல்தான்.

முட்டைக்கோஸ் பொரியல் சுவையானது, ஆரோக்கியமானது என்பதையும் தாண்டி செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. ஆனால் எவ்வளவு நாட்கள்தான் ஒரே மாதிரி முட்டைக்கோஸ் பொரியலை செய்வது. சில பொருட்களை முட்டைகோஸ் பொரியலுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது முட்டைக்கோஸ் கதம்ப பொரியல். இதில் பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் கூடுதல் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்களுக்கு முட்டைக்கோஸ் கதம்ப பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கதம்ப பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முட்டைக்கோஸ் - ½ (பாதியளவு) கப் பொடியாக நறுக்கியது
- பீன்ஸ் - 15 அல்லது 20
- கேரட் - 5 (பெரியது) பொடியாக நறுக்கியது
- பச்சை பட்டாணி - ¼ கிலோ
- பாசிப்பருப்பு - ¼ கிலோ
- தேங்காய் - ½ மூடி
- உப்பு - தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 2 கீறியது
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- காய்ந்த மிளகாய் - 3
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- பாசிப்பருப்பை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவவும்.
- பின் சுத்தமான தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- முட்டைக்கோஸை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி கொள்ளவும்.
- கேரட்டை சுத்தமாக கழுவி விட்டு மேற்தோலை நீக்கிய பின் சிறிய
துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பீன்ஸில் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி விட்டு சிறிய
துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு இரண்டாக கீறி
வைக்கவும்.
- தேங்காயை நறுக்காமல் துருவி எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும். பின் அதனுடன்
பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி விட்டு உடைத்து எண்ணெயில் சேர்த்து
வறுக்கவும்.
- அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்கவும்.
- பின் வாணலியில் ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- ஊற வைத்த பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து தனியே எடுத்து
வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க துவங்கியதும், பருப்பை வாணலியில் சேர்த்து பருப்பு
பாதி வேகும் வரை வேக விடவும்.
- பருப்பு பாதி வெந்ததும், நறுக்கி வைத்த கேரட் மற்றும் பீன்ஸை
சேர்த்து வேக விடவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
- காய்கறிகள் நன்கு வேக வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.
- கேரட் மற்றும் பீன்ஸ் ஓரளவு வெந்ததும், நறுக்கி வைத்த முட்டைக்கோஸை
சேர்க்கவும்.
- அதனுடன் பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின் நன்கு கிளறி வாணலியை மூடவும்.
- அவ்வப்போது கிளறி, காய்கறிகள் முழுமையாக வேகும் வரை வேக
விடவும்.
- பாத்திரத்தை மூடி வைப்பதால் காய்கறிகள் சீக்கிரம் வெந்து
விடும்.
- காய்கறிகள் முழுமையாக வெந்ததும், துருவி வைத்த தேங்காயை சேர்த்து
கிளறி அடுப்பை அணைத்தால், சுவையான முட்டைக்கோஸ் கதம்ப பொரியல்
ரெடி!
- இந்த பொரியலை சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து
பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
