Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்
Muttai Chinthamani Recipe in Tamil: முட்டை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பொதுவுங்க முட்டையை குழம்பு, பொடிமாஸ் அல்லது ஆம்லெட் போன்வற்றை செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் முட்டையை நூற்றுக்கணக்கான வழிகளில் சமைக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது முட்டை சிந்தாமணி. பொதுவாக கொங்கு ஸ்பெஷல் சிந்தாமணியை சிக்கனில்தான் செய்வார்கள். ஆனால் முட்டையிலும் சிந்தாமணி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

இந்த முட்டை சிந்தாமணியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இதை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நன்கு காரசாரமாக இருப்பதால், சளி பிடித்திருக்கும் போது சாப்பிட அருமையாக இருக்கும். இது சாதம், பிரியாணி மட்டுமின்றி சப்பாத்தி, புரோட்டாவுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு கொங்கு ஸ்டைல் முட்டை சிந்தாமணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சிந்தாமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 வேகவைத்த முட்டை
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 4 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 12 விதை நீக்கிய வர மிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முட்டையை முதலில் வேக வைத்து உரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை நன்றாகச் சூடாக்கவும். அதில் கறிவேப்பிலை மற்றும் விதை நீக்கிய வர மிளகாயைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் வேக வாய்த்த முட்டை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து, சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
- இறுதியாக தனியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து கறிவேப்பிலையை தாராளமாக தூவி அடுப்பை அணைத்தால் சுவையான முட்டை சிந்தாமணி ரெடி!



Click it and Unblock the Notifications
