Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
காளானை ஒருடைம் இப்படி கொத்துக்கறி செஞ்சு சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Kalan Kothu Kari Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காளான் பிரியர்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி சமைப்பீர்களா? எப்போது காளான் வாங்கினாலும், அதை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காளான் வாங்கினால் அதைக் கொண்டு கொத்துக்கறி செய்யுங்கள்.
இந்த காளான் கொத்துக்கறி சாதத்திற்கு நல்ல சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த கொத்துக்கறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் கொத்துக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் கொத்துக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* வரமிளகாய் - 4
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்துக்கறிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காளான் - 200 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, பட்டை,
கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து நன்கு
வறுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு அதில் கசகசாவை சேர்த்து அந்த சூட்டிலேயே வறுக்க
வேண்டும்.
* வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும், மிக்சர் ஜாரில் போட்டு நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காளானை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடியைத் திறந்து, அதில் பொடியாக
நறுக்கிய காளானை சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 -5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான காளான் கொத்துக்கறி தயார்.
Image Courtesy: spicysamayals



Click it and Unblock the Notifications











