Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒருடைம் முருங்கைக்காய் வெச்சு ரசம் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Murungakkai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியரா? தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அடிக்கடி வித்தியாசமான ரசம் ரெசிபிக்களை முயற்சிப்பீர்களா? முருங்கைக்காய் கொண்டு ரசம் வைத்துள்ளீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை முருங்கைக்காய் ரசத்தை வையுங்கள்.
இந்த முருங்கைக்காய் ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது, ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் சமையலை டக்கென்று முடிக்க வேண்டுமானால், இந்த ரசத்தை மட்டும் செய்யுங்கள் போதும். முக்கியமாக இந்த ரசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு முருங்கைக்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 2
* தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* புளி தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 5 பல் (தட்டி வைத்தது)
* வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் துண்டுகளாக்கப்பட்ட
முருங்கைக்காயை சேர்த்து, வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு
மென்மையானதும், அதில் புளி தண்ணீரை ஊற்றி, அத்துடன் முருங்கைக்காய்
வேக வைத்த நீரையும் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, பின் வேக வைத்த துவரம்
பருப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க, ரசம்
கொதித்ததும், அதில் ரசப்பொடியை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பின்பு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து
உருகியதும், வரமிளகாய் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











