Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
நோயெதிர்ப்புசக்தி அதிகரிக்க முருங்கைக்கீரையை இப்படிசெஞ்சு சாப்பிடுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுங்க
Murungai Keerai Kadaiyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கிறார்களா? அப்படியானால் அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் முருங்கைக்கீரையை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு முருங்கைக்கீரையை பருப்பு சேர்த்து கடைந்து கொடுங்கள். இப்படி செய்யும் போது, கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பை வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* பூண்டு - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* பூண்டு - 1/2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கட்டு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, அதை
குக்கரில் போட்டு, அத்துடன் 2 பல் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்
தூள் மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி
4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் மற்றும் 1/2 கைப்பிடி
பூண்டு பற்களை எடுத்து தட்டிப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை நீரில் 2 முறை அலசிவிட்டு,
வாணலியில் போட்டு 5 நிமிடம் நன்கு கீரை நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கலந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் வைத்து
மூடி வைத்து நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பருப்பு நன்கு குளிர்ந்ததும், மத்து கொண்டு நன்கு கடைந்தால்,
சுவையான முருங்கைக் கீரை கடையல் தயார்.



Click it and Unblock the Notifications