Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
பாசிப்பருப்பு டிக்கி
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் காரமாக ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையில் டிக்கி செய்யலாம்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் காரமாக ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையில் டிக்கி செய்யலாம். இந்த பாசிப்பருப்பு டிக்கி செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. அதோடு இந்த டிக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே பாசிப்பருப்பு டிக்கி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்து மசித்தது)
* பன்னீர் - 1/4 கப் (துருவியது)
* புதினா - சிறிது
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், பன்னீர், புதினா மற்றும் வேக வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதே பௌலில் சோள மாவு, சீரகப் பொடி, உப்பு, மாங்காய் தூள், மிளகுத் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டி, டிக்கி போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்துள்ள டிக்கிகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு டிக்கி தயார்.
குறிப்பு:
* மாங்காய் தூள் இல்லாதவர்கள், அதற்கு பதிலாக புளிப்பிற்கு எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications








