Latest Updates
-
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. சத்தான... பாசிப்பருப்பு சூப் செய்வது எப்படி?
இன்று சூப் ஏதாவது செய்து குடிக்க விரும்புகிறீர்களா? என்ன சூப் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் சத்தான சூப் செய்து குடியுங்கள்.
மாலை வேளையில் தினமும் காபி, டீயை குடிப்பதற்கு பதிலாக, அவ்வப்போது சூப் தயாரித்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் அல்லவா? நீங்கள் இன்று சூப் ஏதாவது செய்து குடிக்க விரும்புகிறீர்களா? என்ன சூப் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் சத்தான சூப் செய்து குடியுங்கள். இந்த சூப் செய்வதற்கு சமையலறையில் உள்ள ஓரிரு பொருட்களே போதுமானது. முக்கியமாக இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு
தாளிப்பதற்கு..
* கிராம்பு - 1
* பட்டை - 1/4 இன்ச்
* பூண்டு - 3 பல்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பாசிப்பருப்பைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கேரட், தக்காளி சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் அதில் உள்ள பட்டை மற்றும் கிராம்பை நீக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சுவைக்கேற்ப மிளகுத் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒருவேளை சூப் மிகவும் கெட்டியாக இருந்தால், நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக சூப்பை ஒரு பௌலில் ஊற்றி பரிமாறும் போது, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாற வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு சூப் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications